தமிழ் புகட்டு யின் அர்த்தம்

புகட்டு

வினைச்சொல்புகட்ட, புகட்டி

 • 1

  (தானாக உணவு, மருந்து முதலியன உட்கொள்ள முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது விலங்கு போன்றவற்றுக்கு) ஊட்டுதல்.

  ‘மருந்தைச் சங்கில் ஊற்றிக் குழந்தைக்குப் புகட்டினாள்’
  ‘கன்றுக்குட்டிக்கு நீர் புகட்டினோம்’

 • 2

  (கல்வி, நீதி, படிப்பினை முதலியவற்றை ஒருவருக்கு) கற்பித்தல்.

  ‘மக்களுக்கு அடிப்படைக் கல்வி புகட்டாவிட்டால் குடும்பக் கட்டுப்பாடு வெற்றி பெறாது’
  ‘மக்களுக்கு நீதி புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப் பட்ட நூல் இது’
  ‘சிங்கத்துக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று நரிகள் தீர்மானித்தன’