தமிழ் புகழ் யின் அர்த்தம்

புகழ்

வினைச்சொல்புகழ, புகழ்ந்து

 • 1

  (ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி) உயர்வாகக் கூறுதல்; சிறப்பித்துக் கூறுதல்; பாராட்டுதல்.

  ‘அவருடைய சேவையைப் புகழாதவர் இல்லை’
  ‘அவர் தன் கட்டுரையில் உங்கள் கவிதையைப் புகழ்ந்திருக்கிறார்’

தமிழ் புகழ் யின் அர்த்தம்

புகழ்

பெயர்ச்சொல்

 • 1

  பலரும் அறிந்திருக்கிற, பலராலும் உயர்வாகப் பேசப்படுகிற சிறப்பு.

  ‘அவர் பெரும் புகழோடு வாழ்ந்து மறைந்தவர்’
  ‘வெறும் புகழால் என்ன பயன்?’

 • 2

  (சிறப்பான செயல்களால் அல்லது திறமையால் ஒருவருக்குக் கிடைக்கும்) பெருமை.

  ‘காந்தியடிகளின் புகழைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் தாத்தா நிறுத்த மாட்டார்’
  ‘அவர் எந்த மேடையாக இருந்தாலும் தனது கட்சித் தலைவரின் புகழைப் பேசாமல் இருக்க மாட்டார்’