தமிழ் புகார் யின் அர்த்தம்

புகார்

பெயர்ச்சொல்

 • 1

  (பாதிக்கப்பட்டவர்) நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தவறு, குற்றம், பாதிப்பு போன்றவற்றை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் முறையில் எழுத்துமூலமாக அல்லது வாய்மொழியாகத் தெரிவிக்கும் முறையீடு.

  ‘வீட்டில் திருட்டுப்போய்விட்டது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாயா?’
  ‘விடுதியில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் முதல்வரிடம் புகார் செய்தனர்’
  ‘மேலதிகாரியிடம் என்னைப் பற்றிப் புகார் சொன்னாயா?’

 • 2

  (ஒன்றைப் பற்றியோ ஒருவரைப் பற்றியோ சொல்லப்படும்) குற்றச்சாட்டு; குறை.

  ‘நோபல் பரிசுக் குழு பற்றியும் புகார்கள் உள்ளன’
  ‘அமைச்சர்மீது கூறப்பட்ட ஊழல் புகார்கள் நிரூபணமானால் அவருடைய பதவி பறிக்கப்படும்’

 • 3

  (திருப்தியின்மை, உடல்நலக் குறைவு போன்றவற்றைப் பற்றி) முறையிடும் செயல்.

  ‘மருத்துவர்களிடம் அதிகம் வரும் புகார்களில் தலைவலியும் ஒன்று’
  ‘வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை எங்களிடம் தயக்கமின்றித் தெரிவிக்கலாம்’
  ‘புதிதாக அறிமுகமான இந்த காரைப் பற்றி நிறைய புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன’