தமிழ் புகு யின் அர்த்தம்

புகு

வினைச்சொல்புக, புகுந்து

 • 1

  (குறுகிய இடத்தின் உள்ளே ஒன்று) நுழைதல்.

  ‘பாம்பு இந்த இடுக்கில் புகுந்திருக்குமோ?’
  ‘காற்றும் சூரிய ஒளியும் புகாத அறை’
  உரு வழக்கு ‘தேவையில்லாத சந்தேகம் அவன் மனதினுள் புகுந்துகொண்டது’

 • 2

  (வீடு, கூட்டம் போன்றவற்றின்) உள்ளே (விரும்பத் தகாத வகையில்) வருதல் அல்லது நுழைதல்; பிரவேசித்தல்.

  ‘காவலர்கள் வீடுவீடாகப் புகுந்து சோதனை போட்டனர்’
  ‘வீட்டினுள் வெள்ளம் புகுந்தது’
  ‘கூட்டத்தின் உள்ளே புகுந்து கலவரம் செய்தவர்கள்மீது காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள்’