புகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புகை1புகை2புகை3

புகை1

வினைச்சொல்புகைய, புகைந்து, புகைக்க, புகைத்து

 • 1

  (தீ வெளியே தெரியாமல்) புகை வருதல்.

  ‘விறகு ஈரமாக இருந்ததால் அடுப்பு புகைந்துகொண்டிருந்தது’
  ‘அவர்கள் குளிருக்கு இதமாகப் புகைந்துகொண்டிருந்த நெருப்பு மூட்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்’
  ‘பூட்டியிருந்த வீட்டுக்குள் திடீரென்று புகைய ஆரம்பித்தது’
  ‘சாம்பல் கிண்ணத்தில் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது’
  ‘எரிமலை இரண்டு நாட்களாகப் புகைந்துகொண்டிருக்கிறது’

 • 2

  (பகை, சந்தேகம் முதலியன) சிறிதுசிறிதாக வெளிப்படுதல்.

  ‘ஏற்கனவே புகைந்துகொண்டிருந்த விரோதம் இந்தச் சம்பவத்தினால் மேலும் பெரிதாயிற்று’

 • 3

  குமைதல்; குமுறுதல்.

  ‘மனத்துக்குள்ளாகவே புகைந்துகொண்டிருக்காதே, வாய்விட்டுச் சொல்’

 • 4

  (இருமலைக் குறிக்கும்போது) விட்டுவிட்டும் அடைத்தது போலவும் வெளிப்படுதல்.

  ‘தாத்தா இரண்டு நாட்களாகப் புகைந்துபுகைந்து இருமுகிறார்’

புகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புகை1புகை2புகை3

புகை2

வினைச்சொல்புகைய, புகைந்து, புகைக்க, புகைத்து

 • 1

  (சுருட்டு, பீடி போன்றவற்றைப் பற்றவைத்து) புகையை உள்ளிழுத்து வெளிவிடுதல்.

  ‘சுருட்டைப் புகைத்தவாறே கிழவர் பேசினார்’

புகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புகை1புகை2புகை3

புகை3

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பொருள் எரியும்போது உண்டாகும்) கரித்துகள் நிரம்பிய சாம்பல் நிற வாயு.

  ‘சாம்பிராணிப் புகை அறை முழுக்கப் பரவியிருந்தது’
  ‘வாகனங்களின் புகையும் இரைச்சலும் தெருவில் நிற்க முடியாமல் செய்தன’

 • 2

  பனிப் படலம்; நீராவி.

  ‘மலையில் புகை மூட்டம்’