புடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புடை1புடை2

புடை1

வினைச்சொல்புடைக்க, புடைத்து

 • 1

  (உடலில் அடி அல்லது காயம் பட்ட இடம்) கட்டி போலத் தடித்தல்; வீங்குதல்.

  ‘நிலைப்படியில் மோதிக்கொண்டதால் நெற்றி புடைத்திருக்கிறது’

 • 2

  (நரம்புகள், நாளங்கள் முதலியவை) தடித்தல்; (வயிறு) சற்று உப்பியது போலாதல்.

  ‘கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைத்தன’
  ‘வயிறு புடைக்கச் சாப்பிட்டான்’

புடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புடை1புடை2

புடை2

வினைச்சொல்புடைக்க, புடைத்து

 • 1

  (அரிசி முதலியவற்றை அவற்றில் உள்ள தூசி, தவிடு முதலியவை நீங்குவதற்காக) முறத்தில் இட்டு, தானியங்கள் லேசாக எழும்பி விழும் வகையில் மேலும் கீழுமாக ஆட்டுதல் அல்லது தட்டுதல்.

  ‘அரிசி புடைக்க ஆள் வேண்டும்’