தமிழ் புண்ணியம் யின் அர்த்தம்

புண்ணியம்

பெயர்ச்சொல்

 • 1

  (இந்து மதத்தில்) அடுத்த பிறவியில் நற்பலன்களை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிறவியில் செய்யும் நற்செயல்; நல்வினை.

  ‘போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் இப்போது நன்றாக இருக்கிறேன்’
  ‘உன் முன்னோர் செய்த புண்ணியத்தால் நீ இந்த விபத்திலிருந்து தப்பினாய்’
  ‘‘தம்பி உனக்குப் புண்ணியமாகப் போகும், கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்றார் அந்தப் பரதேசி’

 • 2

  (மேற்குறிப்பிட்ட) நல்வினையின் பயன்.

  ‘ஏழைப் பையனுக்கு உதவி செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்’
  ‘‘இந்தக் காலத்தில் பாவமாவது புண்ணியமாவது?’ என்று அலட்சியமாகச் சொன்னான்’
  ‘சகல சொத்துகளுடன் இவன் சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் இவனுடைய தாத்தா சேர்த்துவைத்த புண்ணியம்தான்’

 • 3

  (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) (ஒன்றினால் ஏற்படும்) பலன்; பயன்.

  ‘பிரச்சினைக்கு என்ன வழி என்று யோசிக்காமல் அழுவதில் ஒரு புண்ணியமும் இல்லை’
  ‘இதற்கு மேல் அவனிடம் பேசுவதில் புண்ணியம் கிடையாது’

 • 4

  (இறைவன், பெரியோர் போன்றவர்களின்) அருள்; ஆசி.

  ‘ஆண்டவன் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறேன்’
  ‘கடவுள் புண்ணியத்தில் உனக்கு வேலை சீக்கிரம் கிடைக்கும்’
  ‘உங்கள் புண்ணியத்தில் என் பையனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது’

 • 5

  (பெரும்பாலும் பெயரடையாக) புனிதம்.

  ‘புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்றிருக்கிறார்’
  ‘புண்ணிய பூமி’