தமிழ் புண் யின் அர்த்தம்

புண்

பெயர்ச்சொல்

  • 1

    மேல்தோலில் அல்லது உள்ளுறுப்புகளில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு; இரத்தம் வருவது நின்றுவிட்ட காயம்.

    ‘வாயில் புண் இருப்பதால் சாப்பிட முடியவில்லை’
    ‘சர்க்கரை நோய் இருப்பதால் புண் சீக்கிரம் ஆறவில்லை’
    ‘தொற்றின் காரணமாகப் புண்ணில் சீழ் கோத்திருக்கிறது’