தமிழ் புதுமுகம் யின் அர்த்தம்

புதுமுகம்

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) முதன்முதலாக அறிமுகமாகுபவர்.

  ‘இந்தப் படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்’
  ‘திரையுலகில் புதுமுகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது’

 • 2

  (ஒரு இடத்திற்கு அல்லது துறைக்கு) புதியவர்.

  ‘‘யார் அந்தப் புதுமுகம்?’ ‘அது வேறு யாருமில்லை. புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் பையன்தான்.’’
  ‘மருத்துவத் துறைக்கு நான் ஒரு புதுமுகமே’