தமிழ் புரள் யின் அர்த்தம்

புரள்

வினைச்சொல்புரள, புரண்டு

 • 1

  பக்கவாட்டில் உருளுதல்.

  ‘தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான்’
  ‘குழந்தை அழுது தரையில் விழுந்து புரண்டது’
  ‘பன்றிகள் சேற்றில் புரண்டுகொண்டிருந்தன’

 • 2

  வட்டார வழக்கு (மூட்டு) பிசகுதல்; (தசை இருக்கும் இடத்திலிருந்து சற்று) விலகிவிடுதல்.

  ‘குழந்தையின் கையைப் பிடித்துத் தூக்காதே; கை புரண்டுவிடும்’
  ‘தசை புரண்டு வலிக்கிறது’

 • 3

  (நீர் கரையை) மீறிச் செல்லுதல்.

  ‘கரை புரண்டு ஓடும் வெள்ளம்’

 • 4

  (பணம்) புழங்குதல்/(பணம்) கிடைத்தல்.

  ‘லட்சக் கணக்கில் பணம் புரளும் கடை’
  ‘எல்லோரிடமும் கேட்டுவிட்டேன்; பைசா புரளவில்லை’