தமிழ் புறப்படு யின் அர்த்தம்

புறப்படு

வினைச்சொல்புறப்பட, புறப்பட்டு

 • 1

  (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) செல்ல ஆரம்பித்தல்/(வாகனங்கள் பயணப்படுவதற்காக) கிளம்புதல்.

  ‘அவன் ஊரிலிருந்து நேற்றே புறப்பட்டிருப்பான்’
  ‘அலுவலகத்திற்குப் புறப்படத் தயாரானார்’
  ‘சென்னை செல்லும் பேருந்து ஐந்து மணிக்குப் புறப்படும்’

 • 2

  (குண்டு, அம்பு போன்றவை இலக்கை) நோக்கிப் போதல்; வெளிப்படுதல்.

  ‘வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் பாய்ந்து சென்றது குதிரை’