தமிழ் புற்றுநோய் யின் அர்த்தம்

புற்றுநோய்

பெயர்ச்சொல்

 • 1

  உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரணுக்களை அல்லது இரத்த அணுக்களை இயல்புக்கு மாறாகவும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கும் அதிகரிக்கச் செய்யும் ஆபத்தான நோய்.

  ‘புற்றுநோய்க்கான காரணத்தை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை’
  ‘நீண்ட நாட்களாக ஆறாமலும் வலியில்லாமலும் இருக்கும் புண் புற்றுநோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்’
  ‘இரத்தப் புற்றுநோய்’
  ‘வாய்ப் புற்றுநோய்’
  உரு வழக்கு ‘சமூகத்தைப் பிடித்திருக்கும் புற்றுநோய் ஊழல்தான்’