தமிழ் புலப்படு யின் அர்த்தம்

புலப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (பார்வைக்கு) தெரிதல்.

  ‘கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமி’
  ‘கோயில் கருவறை இருட்டாக இருந்ததால் உள்ளே நுழைந்தவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லை’
  ‘பேருந்தில் செல்லும்போது ஜன்னலின் வழியாகப் புலப்படும் காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்வது அவர் வழக்கம்’
  ‘குளிர் மிகுதியாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் சூரியன் கண்ணுக்குப் புலப்படுவது கடினம்’

 • 2

  (ஒரு உண்மை, உபாயம் போன்றவை ஒருவருக்கு மனத்தில்) தோன்றுதல்.

  ‘இந்தச் சிக்கலைத் தீர்க்க வழி ஏதும் புலப்படவில்லை’
  ‘கட்டுரையை ஊன்றிப் படிப்பவர்களுக்கு மட்டுமே சில உண்மைகள் புலப்படும்’
  ‘நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு இலக்கணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது இந்தச் சுவடிகளிலிருந்து புலப்படுகிறது’