தமிழ் புலம்பு யின் அர்த்தம்

புலம்பு

வினைச்சொல்புலம்ப, புலம்பி

 • 1

  (ஒருவர் தனக்கு ஏற்பட்ட) இழப்பு, பிரிவு போன்றவற்றைச் சொல்லி அழுதல்.

  ‘கணவனை இழந்த துக்கம் தாளாமல் புலம்பினாள்’

 • 2

  (ஒருவர் தன்னுடைய ஏமாற்றம், வருத்தம் போன்றவற்றை வெளிக்காட்டும் விதமாக) குறைபட்டுக்கொள்ளுதல்; அங்கலாய்த்தல்.

  ‘பணம் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தான்’
  ‘இவ்வளவு படித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லையே என்று என் தம்பி புலம்பினான்’