தமிழ் புள்ளி யின் அர்த்தம்

புள்ளி

பெயர்ச்சொல்

 • 1

  வட்ட வடிவச் சிறு குறி.

  ‘புள்ளி போட்ட சேலை’
  ‘வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் புள்ளி முற்றுப்புள்ளி எனப்படும்’
  ‘பத்திரிகையில் ‘ற்’ என்ற எழுத்தில் புள்ளி மறைந்துபோய் ‘வரவேறபு’ என்று இருந்தது’

 • 2

  கணிதம்
  தசமப்புள்ளி.

  ‘6.3 என்பதை எழுத்தால் எழுதும்போது ‘ஆறு புள்ளி மூன்று’ என்று எழுதுகிறோம்’

 • 3

  (விளையாட்டு, பங்குச் சந்தை போன்றவற்றில்) அளவிடுவதற்குப் பயன்படுத்தும் அலகு.

  ‘ஆறு புள்ளிகள் எடுத்தால் இந்தப் பிரிவில் முதல் அணியாக வர முடியும்’
  ‘மும்பை பங்குச் சந்தை எண் இன்று 400 புள்ளிகள் அதிகரித்தது’

 • 4

  (காலம், இடம் சார்ந்து வரும்போது) குறிப்பிட்ட கட்டம்.

  ‘நமது திட்டத்தை இந்தப் புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும்’
  ‘கதை ஒரு புள்ளியில் அப்படியே நின்றுவிடுகிறது’

 • 5

  பேச்சு வழக்கு குறிப்பிடத் தகுந்த ஆள்; நபர்.

  ‘அவர் இந்த ஊரிலேயே பெரிய புள்ளி’
  ‘இது பணக்காரப் புள்ளிகள் வசிக்கும் பகுதி’

 • 6

  பேச்சு வழக்கு (ஒருவரைப் பற்றிய) மதிப்பீடு; கணக்கு.

  ‘நான் போட்ட புள்ளி தவறியதே இல்லை’