தமிழ் பூச்சாண்டி யின் அர்த்தம்

பூச்சாண்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (குழந்தைகளுக்கு) பயம் தரத் தக்க, கோரத் தோற்றம் உடைய (கற்பனையான) உருவம்.

  ‘ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்’
  ‘அதோ பார், பூச்சாண்டி வருகிறான்!’

 • 2

  பேச்சு வழக்கு (ஒருவரை) பயம் கொள்ளவைக்கும்படியான ஏமாற்றுப் பேச்சு அல்லது செயல்.

  ‘விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பூச்சாண்டி வேறா?’
  ‘உன் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’