தமிழ் பூண்டு யின் அர்த்தம்

பூண்டு

பெயர்ச்சொல்

 • 1

  நிலத்துக்கு அடியில் விளையும் (மருத்துவக் குணம் கொண்ட, சமையலுக்குப் பயன்படும்) குமிழ் போன்ற தண்டுப் பகுதியைத் தரும், வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைத் தாவரம்/காரச் சுவை கொண்டதாகவும் தனித்தனிப் பகுதிகளாகப் பிரியக்கூடியதாகவும் இருக்கும், அந்தத் தாவரத்தின் குமிழ் போன்ற தண்டுப் பகுதி.

  ‘பூண்டுத் துவையல்’
  ‘பூண்டு ரசம்’
  ‘பூண்டு ஊறுகாய்’

தமிழ் பூண்டு யின் அர்த்தம்

பூண்டு

பெயர்ச்சொல்

 • 1

  பல இடங்களிலும் வளரக்கூடிய சிறு செடி.