தமிழ் பூமி யின் அர்த்தம்

பூமி

பெயர்ச்சொல்

 • 1

  (சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள) மனிதர்கள் வாழும் கிரகம்.

  ‘பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள இருபத்துநான்கு மணி நேரம் ஆகிறது’
  ‘பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 14.96 கோடி கிலோமீட்டர் ஆகும்’

 • 2

  தரை; (விளை) நிலம்.

  ‘பூமிக்கு அடியில் ரயில்பாதை’
  ‘பொன் விளையும் பூமி’

 • 3

  பொதுவாக நாடு, பிரதேசம் போன்றவற்றைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘பாரத பூமி தொன்மை வாய்ந்த சிறப்புடையது’
  ‘நமது முன்னோர் ஆண்ட பூமி’
  ‘புண்ணிய பூமி’