தமிழ் பூர்த்திசெய் யின் அர்த்தம்

பூர்த்திசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (தேவைகள், விருப்பம் போன்றவற்றை) நிறைவேற்றுதல்.

  ‘மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதே அரசின் முதல் கடமை’
  ‘தனது ஆசையைப் பூர்த்திசெய்துகொள்வதற்காகத் தன்னால் முடிந்த வழிகளைக் கதாநாயகன் கையாளுகிறான்’

 • 2

  நிறைவடையச் செய்தல்; முழுமை அடையச் செய்தல்.

  ‘என் தந்தை படிப்பைப் பூர்த்திசெய்யாமல் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார்’
  ‘இந்த வாக்கியத்தைப் பூர்த்திசெய்யத் தெரியவில்லை’

 • 3

  (விண்ணப்பம், படிவம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்ட இடங்களை) தகவல் தந்து நிரப்புதல்.

  ‘கோடிட்ட இடத்தைப் பூர்த்திசெய்யவும்’
  ‘முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’