தமிழ் பூரிப்பு யின் அர்த்தம்

பூரிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  பெருமித உணர்வு; மிகுந்த மகிழ்ச்சி.

  ‘குழந்தை என் முகம் பார்த்துச் சிரித்தபோது ஏற்பட்ட பூரிப்பை வார்த்தைகளால் வருணிக்க முடியாது’
  ‘அவருக்குப் பரிசு கிடைத்ததில் அவரைவிட எங்களுக்குத்தான் பூரிப்பும் பெருமையும் மிகுதி’
  ‘‘இந்தப் பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை’ எனறு பூரிப்புடன் கூறினார்’

 • 2

  (உடல்) செழிப்பு.

  ‘மணமான பிறகு உடலில் பூரிப்பு’