தமிழ் பெட்டிப் பாம்பு யின் அர்த்தம்

பெட்டிப் பாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரிடம் கொண்ட பயத்தின் காரணமாக) அடங்கி நடப்பவர்; சாதுவாகத் தோற்றமளிப்பவர்.

    ‘அம்மா இருக்கும்போது சத்தமும் கூச்சலும் போடும் தம்பிகள் அப்பாவைக் கண்டதும் பெட்டிப் பாம்பாக மாறிவிடுவார்கள்’
    ‘வகுப்பறைக்குள் தலைமையாசிரியர் நுழைந்துவிட்டால் போதும், மாணவர்கள் பெட்டிப் பாம்புதான்!’