தமிழ் பெண்கேள் யின் அர்த்தம்

பெண்கேள்

வினைச்சொல்-கேட்க, -கேட்டு

  • 1

    தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளைஞனுக்குத் திருமணம் செய்துதரும்படி பெண்ணின் பெற்றோரிடம் இளைஞனின் குடும்பத்தினர் கேட்டல்.

    ‘என் தம்பிக்கு உங்கள் குடும்பத்தில் பெண்கேட்கலாம் என்று நினைக்கிறேன்’
    ‘என் மைத்துனர் பெண்கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்’