தமிழ் பெண்மை யின் அர்த்தம்

பெண்மை

பெயர்ச்சொல்

 • 1

  பொதுவாகப் பெண்களிடம் இயல்பாக இருப்பதாக நம்பப்படும் (மென்மை, நளினம் போன்ற) இயல்புகள்.

  ‘பெண்மையை இழிவுபடுத்தும் காட்சிகளை இந்தப் படத்திலிருந்து நீக்க வேண்டும்’
  ‘என் நண்பனிடம் பெண்மை கலந்த இயல்பு இருந்தது’

 • 2

  கற்பு.

  ‘தனது பெண்மையைச் சூறையாடியவனைப் பழிவாங்காமல் விட மாட்டேன் என்று சூளுரைக்கிறாள் கதாநாயகி’