தமிழ் பெய் யின் அர்த்தம்

பெய்

வினைச்சொல்பெய்ய, பெய்து

 • 1

  (மழை) பெருமளவில் பொழிதல்; கொட்டுதல்; (பனி) விழுதல்.

  ‘நேற்று இரவு கனத்த மழை பெய்தது’
  ‘வெளியே பனி பெய்கிறது’

 • 2

  (சிறுநீர்) கழித்தல்.

  ‘குழந்தை படுக்கையிலேயே மூத்திரம் பெய்துவிட்டது’

 • 3

  உயர் வழக்கு (சாதத்தில் நெய்) விடுதல்.

  ‘சோற்றில் நெய் பெய்து உண்பது வழக்கம்’
  ‘நெய் பெய்து யாகம் வளர்த்தனர்’