தமிழ் பெயர்ச்சி யின் அர்த்தம்

பெயர்ச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு) மாறுதல் அல்லது நகர்தல்.

  ‘பூமியின் மேற்பரப்பில் கண்டங்களின் பெயர்ச்சியால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உருவாயின’
  ‘விண்மீன்களின் பெயர்ச்சியால் ஏற்படும் விளைவுகளை வானியலாளர்கள் கூர்ந்து கவனித்துவருகின்றனர்’

 • 2

  சோதிடம்
  (கிரகங்கள்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுதல்.

  ‘குருபகவான் ஐப்பசி மாதம் 10ஆம் தேதி இரவு மணி 10.19க்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்’
  ‘சனிப் பெயர்ச்சி’