தமிழ் பெருக்கு யின் அர்த்தம்

பெருக்கு

வினைச்சொல்பெருக்க, பெருக்கி

 • 1

  ஓர் எண்ணைக் குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்துதல்.

  ‘ஐந்தை ஏழால் பெருக்கினால் வரும் விடை முப்பத்தைந்து ஆகும்’

 • 2

  அதிகமாக்குதல்; அதிகரித்தல்.

  ‘பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கினால் விலையைக் குறைக்கலாம்’
  ‘இரு நாடுகளும் வர்த்தகத்தைப் பெருக்குவதுகுறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தின’
  ‘வருமானத்தைப் பெருக்க என்ன வழி?’

 • 3

  (திரவ உணவுப் பொருளைத் தேவைக்கு ஏற்ப நீர் கலந்து) அளவில் அதிகப்படுத்துதல்.

  ‘மோரைத் தண்ணீர் விட்டுப் பெருக்கிவை’

தமிழ் பெருக்கு யின் அர்த்தம்

பெருக்கு

வினைச்சொல்பெருக்க, பெருக்கி

 • 1

  குப்பையைத் துடைப்பத்தால் தள்ளுதல்; கூட்டுதல்.

  ‘வாசலைப் பெருக்கிக் கோலம் போட்டாள்’

தமிழ் பெருக்கு யின் அர்த்தம்

பெருக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (ஓடும் நீரின் அளவு) மிகுதி; அதிகரிப்பு.

  ‘ஆற்றின் நீர்ப் பெருக்கைக் காணக் கூட்டம் கூடிவிட்டது’
  ‘வெள்ளப் பெருக்கு’
  உரு வழக்கு ‘மகிழ்ச்சிப் பெருக்கு’