தமிழ் பெருச்சாளி யின் அர்த்தம்

பெருச்சாளி

பெயர்ச்சொல்

  • 1

    (வீடுகளில் புகுந்து உணவுப் பொருளைத் தின்னும்) பருத்த உடலை உடைய ஒரு வகைப் பெரிய எலி.

    ‘பொதுவாகப் பெருச்சாளி இரவில்தான் நடமாடும்’

  • 2

    ஒரு தொழிலில், ஒரு துறையில் நெடுங்காலமாக இருந்து அதன் நெளிவுசுளிவுகளை அறிந்திருப்பதால் மோசடி செய்யத் தெரிந்தவர்.

    ‘நம் நிறுவனத்திலிருந்து ஊழல் பெருச்சாளிகளை நீக்க வேண்டும்’