தமிழ் பெருந்தன்மை யின் அர்த்தம்

பெருந்தன்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பிறருடைய குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமலும், எதற்கும் விட்டுக்கொடுத்தும், தாராளமாகவும் நடந்துகொள்ளும்) உயர்ந்த மனப்பாங்கு; தாராள மனம்.

    ‘நான் செய்த தவறைப் பெரிதுபடுத்தாதது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது’
    ‘கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அவர் பெருந்தன்மையாக நடந்துகொண்டார்’