தமிழ் பெரும்பாலும் யின் அர்த்தம்

பெரும்பாலும்

வினையடை

 • 1

  (ஒரு செயல், நிகழ்வு போன்றவற்றைக் குறித்து வரும்போது) (ஒரு சில தவிர்த்து) ஏனைய அனைத்தும்/(எண்ணிக்கை, அளவு ஆகியவற்றைக் குறித்து வரும்போது) பெரும் அளவில்.

  ‘பெரும்பாலும் அவன் வேலைக்குச் சரியான நேரத்துக்கு வருவதில்லை’
  ‘இந்தச் சொல் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது’

 • 2

  உறுதியாகக் கூற முடியாத வகையில் ஆனால் சாத்தியங்கள் அதிகம் என்ற விதத்தில்; அநேகமாக.

  ‘பெரும்பாலும் அவர் வீட்டுக்குத்தான் போயிருப்பார்’