தமிழ் பெருமிதம் யின் அர்த்தம்

பெருமிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த) பெருமை உணர்வு; பெருமையால் ஏற்படும் மகிழ்ச்சி.

    ‘வெற்றிப் பெருமிதத்தில் இந்திய அணியினர் ஆடிப்பாடினர்’
    ‘‘நாட்டைக் காக்க உயிரையும் விடத் தயாராக இருக்கும் நம் வீரர்கள்’ என்று தளபதி பெருமிதத்தோடு கூறினார்’