தமிழ் பெரும் யின் அர்த்தம்

பெரும்

பெயரடை

 • 1

  (வடிவம், பரப்பு, எண்ணிக்கை, காலம் போன்றவற்றில்) அதிகமான; அதிக அளவிலான; நிறைய.

  ‘நூலின் பெரும் பகுதியைப் படித்துவிட்டேன்’
  ‘படத்தின் பெரும் பகுதி நீண்ட வசனங்கள்தான்’
  ‘பெரும் நூலகம்’
  ‘சென்னையைச் சுற்றிலும் பெரும் ஏரிகள் உள்ளன’
  ‘இந்தப் படத்திற்காக ஒரு பெரும் தொகை அவருக்குச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது’

 • 2

  (ஒன்றின் தன்மையைக் குறித்து வரும்போது) மிகுந்த, முக்கியமான, தீவிரமான அல்லது விரிந்த அளவிலான.

  ‘தனது யதார்த்தமான நடிப்பினால் பெரும் புகழ் பெற்ற நடிகர் இவர்’
  ‘நில அதிர்வினால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது’
  ‘பெரும் புலமை வாய்ந்தவர்’

 • 3

  (தகுதி, மதிப்பு, அந்தஸ்து போன்றவற்றில்) மேல்நிலை கொண்ட; உயர்ந்த; உயர்; சிறந்த.

  ‘பெரும் படிப்பு’
  ‘பெரும் கவிஞர்’