தமிழ் பொதுமன்னிப்பு யின் அர்த்தம்

பொதுமன்னிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கொள்ளைக்காரர்கள், சிறைத் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் போன்றோருக்கு ஒட்டுமொத்தமாகச் சில அடிப்படைகளில் குறிப்பிட்ட நாளிலோ, குறிப்பிட்ட காரணங்களை முன்னிட்டோ அரசு வழங்கும் மன்னிப்பு.

    ‘இந்தியாவின் சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு, பத்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த கைதிகள் பலருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார்கள்’
    ‘பொருளாதாரக் குற்றவாளிகளுக்கும் அந்நியச் செலாவணிச் சட்டத்தை மீறுபவர்களுக்கும் அரசு பொதுமன்னிப்பு வழங்காது என்பதை நிதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்’