பொருட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொருட்டு1பொருட்டு2

பொருட்டு1

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (பெரும்பாலும் ‘ஒரு’ என்னும் சொல்லோடு இணைந்து வரும்போது) மதிக்கத் தக்க, பொருட்படுத்த வேண்டிய ஒன்று அல்லது ஒருவர்.

  ‘அவர் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை’
  ‘இந்த இழப்பெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல’
  ‘இந்தத் தோல்வியையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதலாமா?’
  ‘என்னையும் ஒரு பொருட்டாக மதித்துத் தலைவர் பேசியது எனக்குப் பெருமையாக இருந்தது’

பொருட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொருட்டு1பொருட்டு2

பொருட்டு2

இடைச்சொல்

 • 1

  ‘(முன் குறிப்பிடப்பட்டதன்) காரணமாக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘பிரதமர் வருகையின் பொருட்டுக் காவல் அதிகரிக்கப்பட்டது’
  ‘தற்காத்துக்கொள்ளும் பொருட்டுத் தாக்குவது குற்றம் அல்ல என்று சட்டம் கூறுகிறது’
  ‘உன் பொருட்டு நான் இதைச் செய்கிறேன்’