தமிழ் பொருட்படுத்து யின் அர்த்தம்

பொருட்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) முக்கியத்துவம் அளித்துக் கருத்தில் அல்லது கவனத்தில் கொள்ளுதல்.

    ‘உயிரைப் பொருட்படுத்தாமல் கிணற்றில் குதித்துக் குழந்தையைக் காப்பாற்றினான்’
    ‘அவர் பணத்தைச் சிறிதும் பொருட்படுத்துவதே கிடையாது’
    ‘வெயிலைப் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் வேலை செய்தனர்’