பொருத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொருத்து1பொருத்து2பொருத்து3பொருத்து4

பொருத்து1

வினைச்சொல்பொருத்த, பொருத்தி

 • 1

  (ஒரு பொருள், பாகம் முதலியவற்றை ஒன்றுடன்) இணைத்தல்.

  ‘நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர் விமானம்’
  ‘புது வீட்டில் மின்விசிறிகளெல்லாம் பொருத்திவிட்டீர்களா?’
  உரு வழக்கு ‘புதிய வாழ்க்கை முறையோடு தன்னைப் பொருத்திக்கொள்ள அவனால் முடியவில்லை’

 • 2

  (ஒன்றை ஒன்றுடன்) ஒப்பிடுதல்.

  ‘தன் நிலைமையுடன் தன் நண்பனின் செல்வச் செழிப்பைப் பொருத்திப் பார்த்து ஏங்கினான்’
  ‘கு. அழகிரிசாமி படைப்புகளை அவரது காலத்தோடு பொருத்திப்பார்ப்பது அவசியமாகிறது’

 • 3

  (அறுவைச் சிகிச்சையின் மூலம் உறுப்பையோ கருவியையோ உடலில்) வைத்து இணைத்தல்.

  ‘இறந்தவரின் கண்களை உடனடியாக எடுத்துப் பார்வை இழந்தவருக்குப் பொருத்தினார்கள்’
  ‘குரங்கின் இதயத்தை நாய்க்குப் பொருத்தி ஆராய்ச்சி செய்தனர்’
  ‘இதயத் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் கருவியை அவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தினார்கள்’

 • 4

  (வினாத்தாள், பயிற்சிக் கையேடு போன்றவற்றில்) ஒரு சொல், எண் போன்றவற்றைப் பொருத்தமான சொல், எண் போன்றவற்றுடன் சேர்த்தல்.

பொருத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொருத்து1பொருத்து2பொருத்து3பொருத்து4

பொருத்து2

வினைச்சொல்பொருத்த, பொருத்தி

 • 1

  (எண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி முதலியவற்றை) எரியச் செய்தல்.

  ‘தீக்குச்சியைக் கிழித்து விளக்கைப் பொருத்தினான்’

பொருத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொருத்து1பொருத்து2பொருத்து3பொருத்து4

பொருத்து3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் இடம் அல்லது இணைப்பு.

  ‘கட்டில் காலின் பொருத்தில் மெழுகு வைத்து அடைத்தார்’

பொருத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொருத்து1பொருத்து2பொருத்து3பொருத்து4

பொருத்து4

வினையடை