தமிழ் பொறு யின் அர்த்தம்

பொறு

வினைச்சொல்பொறுக்க, பொறுத்து

 • 1

  (வலி, துன்பம் போன்றவற்றையும் தனக்குப் பிடிக்காத விஷயங்களையும் ஒருவர்) தாங்கிக்கொள்ளுதல்.

  ‘நெஞ்சில் பொறுக்க முடியாத வலி’
  ‘நாற்றம் பொறுக்க முடியாததாக இருந்தது’
  ‘சூடு பொறுக்க முடியாமல் பாத்திரத்தைக் கீழே போட்டுவிட்டான்’
  ‘இந்தக் கொடுமை தெய்வத்துக்கே பொறுக்காது!’
  ‘எனக்காக இந்தச் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள்!’
  ‘வீட்டுக்காரர் கொடுத்த தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் குடியிருந்த வீட்டைக் காலிசெய்தார்’
  ‘அந்தச் செய்தியைக் கேட்டு என் நெஞ்சு பொறுக்கவில்லை’
  ‘பசி பொறுக்க முடியாமல் குழந்தை அழத் தொடங்கியது’

 • 2

  அனுசரித்து நடந்துகொள்ளுதல்.

  ‘குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். நீதான் பொறுத்துப்போக வேண்டும்’
  ‘எவ்வளவு நாள் இப்படியே பொறுத்துக்கொண்டிருப்பது?’

 • 3

  காத்திருத்தல்.

  ‘கொஞ்சம் பொறு. நானும் வருகிறேன்’

தமிழ் பொறு யின் அர்த்தம்

பொறு

வினைச்சொல்பொறுக்க, பொறுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘இந்தக் குடும்ப பாரத்தை நீதானே பொறுக்க வேண்டும்’
  ‘அவனுடைய படிப்புக்கான செலவையெல்லாம் சிறிய தகப்பனே பொறுத்துக்கொண்டார்’