தமிழ் பொறுமை யின் அர்த்தம்

பொறுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (சிரமம், அசௌகரியம் முதலியவற்றை) பொறுத்துக்கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.

    ‘இந்தத் திரைப்படத்தை முழுதும் பார்க்கும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை’
    ‘சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் அமைச்சர் பொறுமையாகப் பதில் அளித்தார்’
    ‘பொறுமையாகத் தேடிப்பார்’