தமிழ் பேரில் யின் அர்த்தம்

பேரில்

இடைச்சொல்

 • 1

  ‘(ஒன்றை) காரணமாக அல்லது அடிப்படையாகக் கொண்டு’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘பெயரால்’.

  ‘என்னுடைய அழைப்பின் பேரில் வந்திருக்கிறார்’
  ‘நீ சொன்னதன் பேரில் அவனுக்குக் கடன் கொடுத்தேன்’
  ‘பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊழியர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது’
  ‘சந்தேகத்தின் பேரில்தான் அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள்’

 • 2

  ‘மேல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘மீது’.

  ‘அவனுக்கு என் பேரில் கோபம்’
  ‘அவன் பேரில் தப்பு இல்லை’