தமிழ் போட்டியிடு யின் அர்த்தம்

போட்டியிடு

வினைச்சொல்-இட, -இட்டு

 • 1

  (தேர்தல், விளையாட்டுப் போட்டி முதலியவற்றில்) பங்கேற்றல் அல்லது கலந்துகொள்ளுதல்.

  ‘எத்தனை பேர் போட்டியிட்டாலும் நான்தான் ஜெயிப்பேன்!’
  ‘விவசாய சங்கத்தின் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்’
  ‘உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் பிரிவில் நான்கு அணிகள் போட்டியிடுகின்றன’

 • 2

  (ஒரு துறையில் மற்றொருவரை) மிஞ்சும் விதத்தில் அல்லது (மற்றவருக்கு) இணையான விதத்தில் செயல்படுதல்.

  ‘முன்னணி நடிகர்களுடன் போட்டியிடுகிற அளவுக்கு இந்தப் புதுமுகம் பிரபலமாகிவிட்டார்’
  ‘உலகச் சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியப் பொருள்களின் தரம் உயர்ந்திருக்கிறது’