தமிழ் போது யின் அர்த்தம்

போது

வினைச்சொல்போத, போதும், போதாது, போதிய, போதாத, போதாமல் முதலிய வடிவங்களில்

 • 1

  தேவைக்குத் தகுந்தபடி அமைதல்.

  ‘ஊருக்கு எடுத்துக்கொண்டு போன பணம் போதவில்லை’
  ‘மதியத்துக்கு ‘சோறு போதும்’ என்றார்’
  ‘உனக்குச் சாமர்த்தியம் போதாது’
  ‘அவனுக்குப் போதிய வருமானம் இல்லை’
  ‘இந்தத் திட்டத்தை நடத்தப் போதிய அளவு விளம்பரம் செய்ய வேண்டும்’
  ‘வெளிச்சம் போதவில்லை என்று ஆட்டம் நிறுத்தப்பட்டது’
  ‘எடுத்துச்சென்ற பணம் போதாமல் நண்பரிடம் கடன் வாங்கினேன்’
  ‘படைபலம் போதாத நிலையில் போரைத் தவிர்ப்பதுதான் சரி என்று தளபதி நினைத்தார்’
  ‘தற்போது வாங்கும் சம்பளம் போதவில்லை என்று வேறு வேலைக்குப் போய்விட்டார்’