தமிழ் போன யின் அர்த்தம்

போன

பெயரடை

 • 1

  (காலத்தைக் குறிக்கும்போது) கடந்த; கழிந்த.

  ‘போன வருடம் நல்ல மழை பெய்தது’
  ‘அவனுக்குப் போன மாதம்தான் திருமணம் நடந்தது’

 • 2

  (நிகழ்ச்சி முதலியவற்றைக் குறிக்கும்போது) முந்திய.

  ‘போன விளையாட்டில் யார் ஜெயித்தார்கள்?’
  ‘போன வகுப்பில் என்ன பாடம் நடந்தது?’