தமிழ் போயும்போயும் யின் அர்த்தம்

போயும்போயும்

வினையடை

  • 1

    ஒருவர் ஒன்றைக் குறித்து அல்லது ஒருவரைக் குறித்து தனது அதிருப்தியைக் கோபமான அல்லது கேலியான தொனியில் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்.

    ‘போயும்போயும் இந்த அரிசியையா வாங்கிவந்தீர்கள்?’
    ‘போயும்போயும் இந்தத் தெருவிலா நமக்கு வீடு கிடைக்க வேண்டும்?’
    ‘போயும்போயும் அவனிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தேனே; என்னைச் சொல்ல வேண்டும்’