தமிழ் போல யின் அர்த்தம்

போல

இடைச்சொல்

தமிழ் போல் யின் அர்த்தம்

போல்

இடைச்சொல்

 • 1

  ஒப்புமைப் பொருளைக் காட்டப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; உவம உருபு.

  ‘புலிபோல் பாய்ந்தான்’
  ‘அவள் குழந்தைபோல் அழுதாள்’

 • 2

  ‘(ஒருவருடைய விருப்பம் முதலியவை எப்படியோ அல்லது ஒருவர், ஒன்று எப்படியோ) (அந்த) முறையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘உன் விருப்பம்போல் செய்!’
  ‘மனம்போல் வாழ்வு!’
  ‘நான் நினைத்ததுபோல் அவன் செய்திருக்கிறான்’
  ‘அவள் எதிர்பார்த்ததுபோல் வேலை கிடைக்கவில்லை’

 • 3

  ‘ஒன்று நிகழாமல் இருக்கும்போதே நிகழ்ந்ததை ஒத்த நிலையில் அல்லது தன்மையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘வீடே இடிந்து விழுவதைப் போல் ஏன் கத்துகிறாய்?’
  ‘வீட்டுக்குப் போவது போல் போக்குக்காட்டினான்’