தமிழ் போலி யின் அர்த்தம்

போலி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தோற்றம், குணம், தன்மை முதலியவற்றில்) பார்ப்பதற்கு உண்மையானதைப் போலவே இருப்பது.

  ‘அவர் காட்டிய மனைப் பத்திரம் போலி என்பது பின்னர்தான் தெரிந்தது’
  ‘போலியான பணிவு’
  ‘போலி மருந்துகளை வாங்கி ஏமாறாதீர்!’
  ‘எதற்கு இந்தப் போலி கௌரவம்?’
  ‘அவர் ஒரு போலி முற்போக்குவாதி’

 • 2

  போலிக் குணம் நிறைந்தவர்; பொய்மை நிறைந்தவர்.

  ‘அவனைப் போன்ற போலிகளும் ஏமாற்றும் பேர்வழிகளும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்’

 • 3

  இலக்கணம்
  பொருள் மாறாத எழுத்து மாற்றம்.

  ‘‘மதில்’ என்ற சொல்லை ‘மதிள்’ என்று எழுதினால் ‘ல’கரத்திற்கு ‘ள’கரம் போலி’