தமிழ் பைத்தியமாக அடி யின் அர்த்தம்

பைத்தியமாக அடி

வினைச்சொல்அடிக்க, அடித்து

  • 1

    (ஒன்று அல்லது ஒருவர் தன்மேல் மற்றொருவர்) வெறித்தனமான விருப்பம் கொள்ளும்படி செய்தல்.

    ‘சிறு வயதில் பணத்திற்காகப் பட்ட கஷ்டம்தான் அவனை இப்போது ‘பணம், பணம்’ என்று பைத்தியமாக அடித்திருக்கிறது’
    ‘அந்த இளம் எழுத்தாளரின் எழுத்து பல வாசகர்களைப் பைத்தியமாக அடிக்கிறது’
    ‘கல்லூரி நாட்களில் அவள் அழகு பல இளைஞர்களைப் பைத்தியமாக அடித்திருக்கிறது’