தமிழ் பொருண்மை யின் அர்த்தம்

பொருண்மை

பெயர்ச்சொல்

 • 1

  (சொல், செயல் போன்றவற்றின்) பொருள்; அர்த்தம்.

  ‘விடுகதைகளின் பொருண்மைகுறித்துச் சமுதாய நோக்கில் ஆராய வேண்டும்’
  ‘சொற்களின் பொருண்மை காலப்போக்கில் மாறிக்கொண்டே வருகிறது’

 • 2

  பருப்பொருளாக இருக்கும் தன்மை அல்லது நிலை; ஸ்தூலம்.

  ‘பொருண்மை உலகம்’

 • 3

  இயற்பியல்
  (ஒரு பொருளின்) நிறை.

  ‘சூரியனின் பொருண்மையில் சுமார் 70% வாயுக்கள்’