தமிழ் பொல்லாத யின் அர்த்தம்

பொல்லாத

பெயரடை

 • 1

  தீமை நிறைந்த அல்லது விளைவிக்கிற.

  ‘பொல்லாத ஆள்’
  ‘அந்தப் பொல்லாத நரி மெதுவாக மானை நெருங்கியது’
  ‘‘ரொம்பப் பொல்லாதது இந்த உலகம்’ என்றார் தாத்தா’

 • 2

  பேச்சு வழக்கு கடுமையான.

  ‘சொல்வதைச் செய்யாவிட்டால் எனக்குப் பொல்லாத கோபம் வரும்’
  ‘பொல்லாத பாவம்’

 • 3

  பேச்சு வழக்கு (ஒன்றைக் குறைத்து மதிப்பிடும்போது கேலியாக) பெரிய; முக்கியமான.

  ‘என்ன பொல்லாத வேலை, எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’
  ‘பொல்லாத பரீட்சை, எனக்குத் தெரியாதா நீ படிக்கும் லட்சணம்?’