மக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மக்கு1மக்கு2மக்கு3

மக்கு1

வினைச்சொல்மக்க, மக்கி

 • 1

  (தாவரம் அல்லது தாவரத்திலிருந்து பெறப்படும் பொருள்கள், எரு போன்றவை பல நாட்கள் ஈரத்தில் அல்லது வெயிலில் கிடந்து) இயல்பான தன்மை இழந்து சிதைதல் அல்லது அழிதல்.

  ‘மக்கிப்போன வீட்டுக் கூரை காற்றடித்தால் சரிந்து விழுந்துவிடும்’
  ‘இலை, தழைகள் மக்கிப்போய் உரம் ஆகின்றன’
  உரு வழக்கு ‘காலப்போக்கில் சில பேரரசுகள் மக்கி மண்ணோடு மண் ஆயின’

மக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மக்கு1மக்கு2மக்கு3

மக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  எளிதில் புரிந்துகொள்ளத் தெரியாதவன்/-ள்.

  ‘நீ சரியான மக்கு’
  ‘எந்த மக்கு உனக்கு இந்த யோசனையைச் சொன்னது?’

மக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மக்கு1மக்கு2மக்கு3

மக்கு3

பெயர்ச்சொல்

 • 1

  (மர வேலையில் பலகைகளின் இடைவெளி அல்லது சிறு ஓட்டை, துளை போன்றவை வெளியே தெரியாமல் இருக்க அடைக்கும்) மெழுகு போன்ற பொருள்; பட்டி.