தமிழ் மடக்கு யின் அர்த்தம்

மடக்கு

வினைச்சொல்மடக்க, மடக்கி

 • 1

  (நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்றை) குறிப்பிட்ட ஒரு நிலையில் படியும்படி செய்தல்.

  ‘காலை மடக்கி உட்கார்ந்திருந்தான்’
  ‘குடையை மடக்கு’
  ‘நாற்காலியை மடக்கி வை’

 • 2

  (ஒருவரை, ஒரு வாகனத்தை) மேலே தொடர்ந்து செல்லவிடாமல் செய்தல்; தடுத்தல்.

  ‘திருடனை மடக்கிப் பிடித்தனர்’
  ‘கடத்தல் பொருள் ஏற்றி வந்த வாகனம் மடக்கப்பட்டது’

 • 3

  (பேச்சு, விவாதம் முதலியவற்றில் ஒருவரை) பதில் சொல்ல முடியாத நிலைக்கு உள்ளாக்குதல்.

  ‘சட்டத்தைச் சுட்டிக்காட்டி என்னை மடக்கிவிட்டார்’
  ‘அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரை மடக்கச் சில குறிப்புகள் வைத்திருந்தார்’

தமிழ் மடக்கு யின் அர்த்தம்

மடக்கு

பெயர்ச்சொல்

 • 1

  மடக்கக்கூடிய அமைப்பைக் கொண்டது.

  ‘மடக்கு நாற்காலி’
  ‘மடக்குக் கத்தி’
  ‘மடக்குக் கட்டில்’

தமிழ் மடக்கு யின் அர்த்தம்

மடக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (நீர் முதலியவை அருந்தும்போது) ஒரு முறை விழுங்குகிற அளவு.

  ‘ஒரு மடக்குத் தண்ணீர் குடி, விக்கல் நின்றுவிடும்’
  ‘பழச்சாறு ஆளுக்கு ஒரு மடக்குதான் இருக்கும்’

தமிழ் மடக்கு யின் அர்த்தம்

மடக்கு

பெயர்ச்சொல்

 • 1

  மண்ணால் ஆன பெரிய அகல் விளக்கு.

  ‘கோயிலில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது’