தமிழ் மட்டு யின் அர்த்தம்

மட்டு

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு பொதுவாக உள்ளதைவிட அல்லது சராசரியாக உள்ளதைவிடக் குறைவு.

  ‘உயரம் கொஞ்சம் மட்டு. அதைத் தவிர பையன் நன்றாக இருக்கிறான்’
  ‘குழம்புக்குக் கொஞ்சம் மட்டாகக் காரம் போடு!’

தமிழ் மீட்டு யின் அர்த்தம்

மீட்டு

வினைச்சொல்மீட்ட, மீட்டி

 • 1

  (வீணை, தம்பூரா போன்ற இசைக் கருவிகளின்) தந்தியை விரலால் மெலிதாக இழுத்து விடுவதன்மூலம் அதிரச் செய்தல்.

  ‘தம்பூராவை மீட்டிக்கொண்டு பாடத் தொடங்கினார்’

தமிழ் மீட்டு யின் அர்த்தம்

மீட்டு

வினைச்சொல்மீட்ட, மீட்டி

 • 1

  (அடகு வைத்ததை) திரும்பப் பெறுதல்.

தமிழ் மீட்டு யின் அர்த்தம்

மீட்டு

வினைச்சொல்மீட்ட, மீட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நினைவு கூர்தல்.

  ‘நீ சொன்னதைத் திரும்பவும் மீட்டிப்பார்க்கிறேன்’